Home /local-news /

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு கடைகள் அமைக்கும் பணி தீவிரம் 

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு கடைகள் அமைக்கும் பணி தீவிரம் 

Intensity

Intensity of work to set up shops ahead of Laksha deepam festival

Villupuram District | 2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபதிருவிழா நடைபெற உள்ளது

    லட்சதீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் லட்சதீப திருவிழா வெகு விமரிசையாக  நடைபெற்றுவரும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகபிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் லட்சதீப திருவிழா நடைபெறவில்லை.

    இதனை அடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபதிருவிழா நடைபெற உள்ளது. நாளை லட்ச தீப திருவிழாவில் , பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து , ஒரு லட்சம் தீபங்களே குளத்தில் ஏற்றுவார்கள் . ஆகையினால் தான் இதற்கு லட்சத்தி 10 ரூபாய் என்று பெயர் . வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்றும், நிறைவேற்றியதற்கு நேத்திகடன் செலுத்துவதற்கும் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்வார்கள் பக்தர்கள் .

    இதனை தொடர்ந்து வருகிற18-ந் தேதி வரை தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில்சாமி திருவீதி உலாவும், முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

    தெப்பக்குளம் சீரமைப்புஇதையொட்டி தற்போது தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. குளத்தை சுற்றிலும் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு குளத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இக்கோயிலின் சிறப்பு லட்ச தீபங்களை கொண்டு பக்தர்கள் வழிபாடு செய்வது தான்.

    மேலும் குளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு மின் மோட்டார் மூலம் சுகாதாரமான தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    தற்போது 2ஆண்டுகளுக்கு பிறகு லட்சதீப திருவிழா நடப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதாலும், ஏதும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இரண்டு கடமைக்கு பிறகு நட்சத்திர நடைபெறுவதால் பல பகுதிகளிலிருந்து, திருவிழாவிற்கு பல கடை வியாபாரிகள் வருகை புரிந்து வீதிகளை கடை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த திருவிழா நடைபெறுவதால் வியாபாரிகள் மிக மகிழ்ச்சியுடன், கடைகள் அமைத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது, விழுப்புரத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், நாளை மழை பெய்தால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கும் எனவும் கவலை அடைந்து வருகின்றனர். அதுபோல இன்று விழுப்புரத்தில் பெய்த மழையால் கடைகள் அனைத்தும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி