இரண்டு ஆண்டுக்கு பின்னர்
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் நடைபெற்ற லட்ச தீப திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அகல்விளக்கேற்றி, சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் திரு விக வீதியீல் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெயஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டு தோறும் பங்குனி 27 முதல் சித்திரை மாதம் 7 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ கட்டுபாடுகளால் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆஞ்சநேயர் கோயிலின் முக்கிய நிகழ்வான இன்று லட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
.லட்ச தீபத்தினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு தீபம் ஏற்றி நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது . இதனை பக்தர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர் .லட்ச தீப திருவிழாவினை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு கால பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.