Home /local-news /

கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு.. கோமாரி நோய் தடுப்பு முகாம் பற்றி தெரிஞ்சுக்கோங்க...

கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு.. கோமாரி நோய் தடுப்பு முகாம் பற்றி தெரிஞ்சுக்கோங்க...

கால்நடை

கால்நடை

Villupuram District | விழுப்புரம் மாவட்டத்தில்  கால்நடைகளுக்கு  சிறப்பு முகாம் இன்று (20.04.2022 முதல் 10.05.2022 வரை)துவங்கி 21 நாட்களுக்கு நடைபெறுகின்றன.

    கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை காகுப்பத்தில் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் திரமோகன் கலந்துகொண்டார்.

    கால்நடைகள் விவசாயிகளுக்கு பெரிதும் வாழ்வாதாரத்தை வழங்கி வரும் உற்ற நண்பனாக திகழ்ந்து வருகின்றன. இந்த கால்நடைகளை பொறுத்த வரை அதிகமாக கோமாரி நோயினால் பாதிப்புக்குள்ளாகும். அதை தடுக்கும் வண்ணம் முதலமைச்சர் ஆணைக்கிணங்க கால்நடை வளர்ப்போர் பகுதிகளுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை செலுத்தும் வண்ணம் தடுப்பூசி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறப்பு முகாம்கள் மாவட்டந்தோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சிறப்பு முகாம் இன்று (20.04.2022 முதல் 10.05.2022 வரை) துவங்கி 21 நாட்களுக்கு நடைபெறுகின்றன.

    ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் பல கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவத்துறையின் அலுவலர்கள், பணியாளர்கள் கொண்ட குழு தலைமையில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    மேலும் இக்காலக்கட்டங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்த தவறிய கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடுதலாக ஐந்து நாட்கள் முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கம் கால்நடை வளர்ப்போர் அனைத்து கால்நடைகளையும் நல்ல முறையில் பாதுகாத்து பயன்பெற வேண்டும் என்பதே ஆகும். பொதுவாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டால், பால் கரக்கும் கறவை மாடுகளுக்கு பால் உற்பத்தித் திறன் குறைவதுடன், மாட்டிற்கும் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும். பால் உற்பத்தி திறன் குறைவு ஏற்பட்டால் கால்நடை வளர்ப்போருக்கான பொருளாதார நிலை குறையும்.

    எனவே இந்நிலையினை தடுத்திடும் வகையில் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார நெருக்கடியை தடுத்திடவும், கறவை மாடுகளை பாதுகாத்திடவும், கோமாரி நோய் முழுமையாக தடுத்திடும் வண்ணம் கால்நடை வளர்ப்போர் 100 சதவீதம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியினை செலுத்தி முற்றிலும் கால்நடைகளை நல்ல முறையில் பாதுகாத்து பயன்பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பிற்கான தடுப்பூசி முகாம் மட்டுமன்றி கால்நடைகளுக்கு மற்ற நோய்கள் இருந்தால் அதையும் குணப்படுத்துவதற்கு இத்தகைய சிறப்பு முகாம்கள் மூலம் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை வழங்க உள்ளார்கள். அதேபோல் தொழில்நுட்ப உதவியுடன் செயற்கை கருவூட்டல் சிகிச்சையும் வழங்கப்படுகின்றன.

    அதுமட்டுமன்றி மேலும் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய்த்தாக்குதல் இருந்து வருகிறதா என கண்டறியும் வகையில் பரிசோதனைக்கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு அதற்கேற்ப சிகிச்சையும் வழங்கப்டுகிறது.

    இத்தகைய திட்டத்தையும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்தார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி