விழுப்புரத்தில் உள்ளஅக்ஷர்தம் பள்ளி வளாகத்தில் சிலம்பப் போட்டி நடைபெற்றது. டி என் ஆர் எஸ் (DNRS ) அன்பு சிலம்பாட்ட கழகம் குழு சார்பாக 5 வயதுடைய தமிழ் நிலவன், சிறுமி பொன்மதியாள் ஆகிய இருவரும் ஒரு மணி நேரம் கண்ணை கட்டிக்கொண்டு இடைவிடாமல் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுவயதிலேயே சாதனை படைத்த சிறுமி, சிறுவனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
வெற்றி வாகை சூடிய இருவரும் பேசுகையில் , சிலம்பம் மிகவும் பிடிக்கும்; நாங்கள் கடந்த மூன்று மாதங்களாக சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சாதனை புரிவதற்கு எங்கள் பயிற்சியாளர்கள் காரணம். சிலம்பம் பயிற்சி பெற்றதன் மூலம் நாங்கள் மிகவும் தைரியமாக உணருகிறோம் என்றனர்.
பயிற்சியாளர் அன்பரசி கூறுகையில், 500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு சிலம்பாட்டம், மான்கொம்பு, சுருள் வாள், அலங்காரச் சிலம்பம்,போர்முறை சிலம்பம் போன்ற கலைகளை கற்றுத் தருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
தனியார் பள்ளி மாணவர்கள் மாதம் 300 ரூபாய் செலுத்தி சிலம்பத்தை கற்றுக் கொள்கின்றனர். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் பல சாதனைகளை படைத்துள்ளனர் என பெருமிதத்தோடு தெரிவித்தார்.
செய்தியாளர் : சு. பூஜா - செய்தியாளர்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.