Home /local-news /

விழுப்புரம் : மாடித் தோட்டத்தில் ஆரோக்கியமான காய்கறிகள் வளர்க்கும் தம்பதி

விழுப்புரம் : மாடித் தோட்டத்தில் ஆரோக்கியமான காய்கறிகள் வளர்க்கும் தம்பதி

Villupuram:

Villupuram: A couple growing vegetables at terrace garden

விழுப்புரம் இ.எஸ். கார்டனில் உள்ள பரமேஸ்வரி, நெடுமாறன் ஆகிய தம்பதி இணைந்து வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து  காய்கறிகளை அறுவடை ச

    ரசாயனம் கலந்த உணவைச் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் உணவு முறை தான். அடுத்தத் தலைமுறையை காப்பாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. முதலில் ஆரோக்கியத்தை நம் உணவில் காட்ட வேண்டும்.

    நாம் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ரசாயனம் கலக்காமல் இயற்கை முறையில் நிறைந்ததாக இருக்க வேண்டும். தற்போதுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் மாடித்தோட்டம் அமைப்பது , வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    விழுப்புரம் இ.எஸ். கார்டனில் உள்ள பரமேஸ்வரி, நெடுமாறன் ஆகிய தம்பதி இணைந்து வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை அறுவடை செய்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.மாடித்தோட்டத்தில் வெண்டை, கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, முள்ளங்கி, கத்தரி, தக்காளி, கீரை, பாகற்காய், அவரை, குடைமிளகாய், புதினா, பச்சைமிளகாய் போன்ற காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து பரமேஸ்வரி நம்மிடம், “நாங்கள் தற்போது சிறிய முயற்சியாக ஆரம்பித்து உள்ளோம். நிச்சயமாக நல்ல அளவில் மாடித் தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்து அறுவடை செய்வோம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம்” என்றார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி