ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில், ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இது ஏராளமான பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் அணி தேர்வு
விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வரும் 1ம் தேதி காலை 8:30 மணியளவில், 16 வயதுக்குட்பட்டோர்க்கான மாவட்ட அளவிலான அணி தேர்வு நடக்கிறது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள கிரிக்கெட் அகாடமியில் இத்தேர்வு நடக்கிறது.
நூதன முறையில் ரூ.2.24 லட்சம் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா கலைவாணர் நகரை சேர்ந்த சரவணன், என்ற விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.2.24 லட்சத்தை மர்மநபர்கள் நுாதன முறையில் திருடியது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலி கையெழுத்து மூலம் வங்கியில் திருட்டு
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தனியார் வங்கியில், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து போலியாக கையெழுத்துபோட்டு ரூ.3.45 லட்சத்தை எடுத்த அங்கு பணிபுரியும் இரண்டாம் நிலை மேலாளர் பிரேம் ராகேஷ் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வெங்காயம் ஏற்றிவந்த மினி சரக்கு லாரி விபத்து
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் புறவழிச்சாலையில் பெங்களூருவில் இருந்து பேரங்கியூருக்கு வெங்காயம் ஏற்றிவந்த மினி சரக்கு வாகனத்தின் டயர் வெடித்ததால், சாலையில் வெங்காய மூட்டைகள் சிதறியது. வெங்காயம் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேருந்தில் மர்ம நபர்கள் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரை சேர்ந்தவர் ராமு மனைவி மகேஸ்வரி என்பவர் வங்கியில் இருந்து எடுத்துச்சென்ற ஒரு லட்சம் ரூபாயை பஸ்சில் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20 நபர்கள் பணி நியமனம்
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், பல்வேறு மாணவர்கள் பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டதில் இறுதியாக 21 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கூலித் தொழிலாளர் வீட்டை உடைத்து நள்ளிரவில் திருட்டு
விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுாரை சேர்ந்த சேகர் என்ற கூலி தொழிலாளியின் வீட்டின் கதவை நள்ளிரவில் உடைத்து 4 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
79 மொபைல் போன்களை உரிமையாளரிடம் ஒப்படைத்த எஸ் பி
விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல்போன 17 லட்சம் மதிப்பிலான 79 மொபைல் போன்களை கண்டுபிடித்து, உரிமையாளர்களிடம் எஸ்.பி., ஸ்ரீநாதா ஒப்படைத்தார்.
மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த ஊர்க்காவல் படை காவலர்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் நெல்சன் மனைவி கவுசல்யா, என்ற ஊர்காவல் படை பெண் காவலர், குடும்ப பிரச்னை காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் சு. பூஜா விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.