விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ளது வள்ளலார் அருள் மாளிகை. வரலாறு போற்றும் வகையிலும் அவர் சொன்ன வழியிலும் அவருடைய சிஷ்யர்கள் பல உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர்.
அதுபோல இன்று விழுப்புரத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார் துவக்கி அருளிய 151வது ஆண்டையொட்டி அருள் மாளிகையில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ட்ரஸ்ட் அன்பர்கள் 81 ஆவது ஆண்டாக நடத்தும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் ஆதரவற்றவர்கள் கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் என ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் வேஷ்டி புடவை வழங்கப்பட்டது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிக கூட்டத்தில் இருக்கக் கூடாது என்று எண்ணி ஒரு நாளில் 100 நபர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் முதல் நாளில் 100 பேருக்கு வேஷ்டி, புடவை, அரிசி வழங்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் 10 கிலோ அரிசி, புடவை, வேஷ்டி, பெட்ஷீட் ஆகியன வழங்கப்பட்டன.
மேலும் பொதுமக்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பெரும் விழாவிற்கு விழுப்புரம் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என தெரிவித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.