திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், பல சிறப்புமிக்க கோவில்கள் இருந்தாலும், இயற்கையை அழகை தன்னுள் அடங்கியுள்ள திருச்சியில் பல இடங்களும் உண்டு. அதில் ஒன்றுதான் பச்சை மலையாகும் . திருச்சியில் இருந்து இருந்து 3 மணி நேரம் பயணம் செய்தால் இந்த பச்சை மலையை அடைந்து விடலாம்.
திருச்சியிலிருந்து துறையூர், அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரம், அங்கிருந்து சோபனபுரம் வழியாகச் சென்றால் பச்சைமலையை அடையலாம். அதன் இரண்டு பக்கங்களிலும் செல்லும் வழியெல்லாம் பச்சைக்காடுகள், வயல்வெளிகள் எனக் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பல இடங்கள் காணப்படுகிறது.
இங்கே காணும் இடமெல்லாம் பசுமை போர்த்தியது போல் பச்சைப்பசேலென்ற மரங்கள், புல்வெளிகள் செடிகள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் இயற்கையால் இந்த மலை சூழ பட்டுள்ளதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் குளிர்ந்த காற்று மற்றும் செடிகளின் மூலிகை வாசனை நம் மனதிற்கு இதம் அளிக்கிறது.
இது மட்டும் இல்லை இங்கு பறவைகள் கூட்டம், உயிரினங்களுக்கும் மற்றும் இயற்கையின் வழி தாயாக அமைந்துள்ளது இந்த பச்சை மலை...
இந்த மலையில் வனத்துறை கணக்கெடுப்பின்படி, 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. வாகன இரைச்சல் ஏதும் இல்லாத காரணத்தால், இங்குள்ள பறவைகளும் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஒரு குளிர்ந்த மலை பகுதியாக இந்த பச்சை மலை உள்ளது.மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்ல ஆரம்பிக்கும் போது மேகங்களெல்லாம் கீழே இறங்கி. ஒரு அழகான அனுபவத்தைக் கொடுக்கும்.
.மேலும் இங்குள்ள அருவிகளில் வரும் சத்தமானது ஒரு இதமான உணர்வை தருகிறது. ஓங்கி விழும் நீரின் சத்தத்தைக் கேட்கும் போதே, மனதிற்கு ஒரு நிம்மதி கலந்த மகிழ்ச்சி கிடைக்கும். இந்த பச்சைமலையில் மங்களம் அருவி, எருமைப்பள்ளி அருவி, மயிலூற்று அருவி, கோரையாறு அருவி எனப் பல அருவிகள் இருக்கின்றன. இதில் எருமைப்பள்ளி, கோரையாறு அருவிகளுக்கு வனத்துறையினரின் அனுமதி, பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய அனுமதியில்லை.
இத்தனை அருவிகளும் ஓரே மலையில் அமைந்துள்ள காரணத்தால் பச்சைமலை ’அருவிகளின் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகளும் இந்த பச்சைமலையில் தான் உற்பத்தியாகின்றன. மொத்தத்தில் பச்சைமலை அருவிகள் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலாப் பகுதி மட்டுமல்லாமல், இயற்கையின் தாய் இடமாக இருக்கிறது.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.