திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கினார்.
மேலும் டிஜிஎம் முரளி முதுநிலை மேலாளர் ராஜேந்திரன் பாதுகாப்பு அதிகாரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ராட்சச வாகனத்தில் மூலமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு எடுத்து செல்லும் இந்தியன் கேஸ் திரவம் சாலையில் செல்கின்ற பொழுது திடீரென்று கேஸ் கசிவு ஏற்பட்டால் அதிலிருந்து விபத்து நடைபெறாமல் எவ்வாறு மற்றொரு வாகனத்திற்கு திரவத்தை மாற்றுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் கேஸ் திரவம் கசிவு ஏற்பட்டால் அதற்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட ஆபத்துக்கால வாகனத்தின் மூலமாக ஒத்திகை விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் விபத்துகள் ஏற்படும் போது பொதுமக்கள் கையாள வேண்டிய விதிமுறைகள் குறித்து தீயணைப்பு துறை சார்பாக மாவட்ட அலுவலர் விவேகானந்தன் உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் நிலைய அலுவலர் மெல்கியூராஜ் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி காட்டினர்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.