Home /local-news /

தேனி : விவசாயிகளின் கவனத்திற்கு ...கூட்டுப் பண்ணையத் திட்டதின் பயன் என்ன? முழு விவரம் இதோ!

தேனி : விவசாயிகளின் கவனத்திற்கு ...கூட்டுப் பண்ணையத் திட்டதின் பயன் என்ன? முழு விவரம் இதோ!

விவசாயிகளின் கவனத்திற்கு... கூட்டுப் பண்ணையத் திட்டதின் பயன் என்ன? முழு விவரம் இதோ!

விவசாயிகளின் கவனத்திற்கு... கூட்டுப் பண்ணையத் திட்டதின் பயன் என்ன? முழு விவரம் இதோ!

இத்திட்டத்தின் கீழ் ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலமுள்ள 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு, விவசாய ஆர்வலர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலமுள்ள 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு, சாகுபடி செய்வதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு தொகுப்பு நிதி வழங்கிடும் பொருட்டு கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    வேளாண் சார்ந்த திட்டங்கள் :-

    தமிழக அரசு வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில், சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு, சாகுபடி செய்வதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு தொகுப்பு நிதி வழங்கிடும் பொருட்டு கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலமுள்ள 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு, விவசாய ஆர்வலர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை போன்று அருகில் உள்ள 5 விவசாய ஆர்வலர்களை இணைத்து, உறுப்பினர்களாகக் கொண்டு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் குறைந்தபட்சம் 100 சிறு, குறு விவசாயிகளை, வேளாண்மை தொடர்பான பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ரூ. 5 இலட்சம் மூலதன நிதியின் மூலம் குழுவில் உள்ள குறு விவசாய உறுப்பினர்கள் தங்களின் தேவைக்கேற்றவாறு, நுண்ணீர்ப் பாசன அமைப்பு, நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள், பொதுப் பயன்பாட்டுக்கான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட பணிகளுக்காக பல்வேறு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கூட்டுப்பண்ணையத் திட்டம் :-

    கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி கடமலைக்குண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 104 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 61 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 13 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் சாகுபடி செய்வதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு தொகுப்பு நிதியாக ரூ. 5 இலட்சம் வீதம் தேனி மாவட்டத்திற்கு ரூ. 140 / - இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் சார்ந்த திட்டங்களை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி