Home /local-news /

அடிக்கல் நாட்டிய முதல்வர்.. தேனி மாவட்டத்திற்கு வரப்போகும் திட்டங்கள் என்ன? முழு விவரம் இதோ!

அடிக்கல் நாட்டிய முதல்வர்.. தேனி மாவட்டத்திற்கு வரப்போகும் திட்டங்கள் என்ன? முழு விவரம் இதோ!

Mk Stalin 

Mk Stalin 

பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ 259.82 கோடி மதிப்பில் திட்ட பணிகளை தொடங்கி வைத்து, 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார்.

    அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகளின் விவரங்கள் :-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இலட்சுமிபுரத்தில்
    2 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் களகண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையக் கட்டடம்,

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தேனியில் 3 கோடியே 47 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபான்மையின மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம்,

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையக் கட்டடம்,

    ஓடைப்பட்டி பேரூராட்சியில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்ராசு கவுண்டர் குனம் மேம்பாட்டுப் பணிகள்,

    கம்பம் நகராட்சியில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் வாரச் சந்தை மேம்படுத்தும் பணி,

    தேனியில் 3 கோடியே 33 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் எ.வாடிப்பட்டி ஊராட்சியில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி,

    கீழவடகரை ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி, அத்தியூத்து ஊராட்சியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி உள்ளிட்ட 18 கோடியே 5 இலட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள்,

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் இராசிங்காபுரம், எருமலை நாயக்கன்பட்டி, அப்பிபட்டி, சருத்துப்பட்டி, கு லட்சுமிபுரம்,
    எஸ் கதிர்நரசிங்கபுரம், சில்வார்பட்டி பெரியகுளம் க.புதுப்பட்டி குச்சனூர். லோயர்கேம்ப் மேல சொக்கநாதபுரம் சில்லமரத்துப்பட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, கொடுவிலார்பட்டி, கோட்டூர், கொண்டமநாயக்கன் பட்டி வாய்கால்பாறை ஆகிய இடங்களில் 32 கோடியே 85 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் என மொத்தம் 74 கோடியே 21 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    நலத்திட்ட உதவிகள் :-

    அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    வருவாய்த் துறை , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தாட்கோ தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம்,  பண்பாட்டுத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வனத்துறை

    பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள். பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி