Home /local-news /

சிறந்த ஊராட்சி விருது.. இடியுடன் மழை.. தேனி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்...!!

சிறந்த ஊராட்சி விருது.. இடியுடன் மழை.. தேனி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்...!!

Temple 

Temple 

Theni | தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

  தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

  மீண்டும் கோடை மழை :-

  தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இன்று மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கம்பம் கூடலூர் சின்னமனூர் போடி தேனி ஆகிய பகுதிகளில் மாலை ஆறு மணியில் இருந்து சூறைக்காற்று விச ஆரம்பித்து சுமார் 30 நிமிடம் தொடர்ந்து மிதமான கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :-

  தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுதிறனாளிகள், விதவை, முதியோர் உள்ளிட்டோருக்கான மாதந்திர உதவிதொகை தமிழக அரசால் கூட்டுறவு மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கம்பத்தில் உள்ள மதுரை கூட்டுறவு வங்கியின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்காக கடந்த சில நாட்களாகவே வங்கி வந்து சென்றுள்ளனர், வழக்கம் போல் . நேற்றும் வங்கிக்கு வந்துள்ளனர்.

  அப்போது வங்கி அதிகாரிகள் இன்னும் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படவில்லை என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுதிறனாளிகள் கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் செயலாளர் கருப்பையா தலைமையில் வங்கியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்ககூடிய உதவித்தொகையினை காலதாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும், வங்கியில் மாற்றுதிறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைத்துதரவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்தததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரத்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாதந்தோறும் காலதாமதமின்றி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது

  சிறந்த ஊராட்சி விருது :-

  தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி
  சிறந்த ஊராட்சி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் பால்ராஜிடம் கிராம விருது மற்றும் ஊக்கத் தொகைபத்து லட்சம் ரூபாய்கான காசோலையை
  மாவட்ட ஆட்சியர் முரளிதரன்
  வழங்கினார். கிராம விருதை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ்
  தமிழக அரசுக்கும் தேனி மாவட்ட
  நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்ததோடு, எருமலை நாயக்கன்பட்டி கிராமத்தில் சமத்துவபுரம் அமைத்திட நடவடிக்கை
  மேற்கொள்ள வேண்டுமாய் கோரிக்கை
  வைத்தார்.

  இலவச நீர் மோர் பந்தல் :-

  தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓபன்னீர்செல்வத்தின் இல்லம் அருகில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர்பந்தல் அமைக்கப்பட்டது.

  24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்
  ஓ. சண்முகசுந்தரம் பொதுமக்களுக்கு நீர் மோர் தண்ணீர் பாலங்கள் குடிநீர் பாட்டில்களை வழங்கினார்.

  கோவில் திருவிழா :-

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

  நேற்று இரவு பொங்கல் வைத்தல் மற்றும் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து இன்று மாலையில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, கயிறு குத்தி, காவடி எடுத்தனர். மேலும் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி