தேனி மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட கழிவு வாகனங்களை ஏலம் விடும் நிகழ்வு மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் பலர் பங்கேற்று வாகனங்களை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
வாகன ஏலம் :-
தேனி மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 42 இரு சக்கர வாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 55 வாகனங்களுக்கான பொது ஏலம் இன்று தேனி மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பங்கேற்ற நபர்கள் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.2 ஆயிரமும் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெற்றது.
ஏலம் எடுத்தவுடன் ஏலத் தொகையுடன் சேர்த்து இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி மற்றும் ரொக்க தொகையை ஏலம் எடுத்தவர்கள் செலுத்தினர்.
அதே வேளையில் ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீது மட்டுமே வாகனத்துக்கான ஆவணமாகும். எந்தப் பெயரில் ஏல ரசீது பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மொத்தம் 55 கழிவு வாகனங்கள் 18,63,500/- ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 12% மற்றும் 18% ஜி.எஸ்.டி தொகை 2,95,680/- பெறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 21,59,180/- ரூபாய்க்கு வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ஏலம் முடிவுபெற்றது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.