Home /local-news /

விவசாய சங்கத்தினரின் மூன்று நாள் வேன் பிரச்சார இயக்கம் லோயர் கேம்பில் தொடக்கம்..

விவசாய சங்கத்தினரின் மூன்று நாள் வேன் பிரச்சார இயக்கம் லோயர் கேம்பில் தொடக்கம்..

Van

Van campaign 

Theni : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தேனி மாவட்ட குழுவின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் வேன் பிரச்சார இயக்கம் நடத்தப் படுகிறது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தேனி மாவட்ட குழுவின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் வேன் பிரச்சார இயக்கம் நடத்தப் படுகிறது.

    வேன் பிரச்சார இயக்கம்

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மார்ச் மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு இயக்கமாக வேன் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது

    தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளரான காசி விஸ்வநாதன் தலைமையில் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தொடங்கிய இந்தப் பிரச்சாரத்தை, ஐந்து மாவட்ட விவசாயிகளின் சங்கத் தலைவரான அப்பாஸ் இந்த வேன் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த பிரச்சாரத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் எனவும் பேபி அணை கட்டுமானத்திற்கு கேரளா ஒத்துழைக்க வேண்டும் எனவும், முல்லை பெரியார் அணை பாதுகாப்பானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கேரள அரசு கெடுபிடி காட்டுவதை தவிர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.

    மேலும் தேனி மாவட்ட வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும், வருஷநாடு பகுதியில் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்ற விவசாயிகளை வன உயிரின சரணாலயம் என்ற பெயரில் அவர்களை வெளியேற்ற நடைபெறும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேன் பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Farmers, Gudalur, Theni

    அடுத்த செய்தி