Home /local-news /

உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு வெண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய தன்னார்வலர்கள் 

உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு வெண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய தன்னார்வலர்கள் 

உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு வெண்ணீர் சுத்திகரிப்பு வழங்கிய தன்னார்வலர்கள் 

உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு வெண்ணீர் சுத்திகரிப்பு வழங்கிய தன்னார்வலர்கள் 

உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் மற்றும் இதர மருத்துவ சேவைக்காக அதிகளவிலான மக்கள் உத்தம்பாளையம் அரசு மருத்துவமனையை நாட தொடங்கியுள்ளனர்

    உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் சுகாதாரமான காய்ச்சிய சுடு நீரை குடிக்க வேண்டும் என்ற நோக்கில், உத்தம பாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களால் மருத்துவமனைக்கு சுடுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது .

    தொற்று நோய் பரவல் :-

    தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது . தேனி மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், கம்பம், கூடலூர் ,போடி, சின்னமனூர், உத்தமபாளையம்,தேனி போன்ற பல பகுதிகளிலும் கொரோனா தொற்று அல்லாத மர்ம காய்ச்சலால் பல மக்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உத்தமபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற மக்கள் இந்த மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர் காய்ச்சல் பரவி வருவதால் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் சில நேரங்களில் கலங்கலாக விநியோகிக்கப்படுவதால் மக்கள் அவற்றை காய்ச்சி குடிப்பது இல்லை என்றும் இதனால் மர்ம காய்ச்சல் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மருத்துவர்கள் பொதுமக்களை தண்ணீரைக் காய்ச்சி பருக அறிவுறுத்தி வருகின்றனர்.

    தன்னார்வலர்களின் செயல் :-

    உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் மற்றும் இதர மருத்துவ சேவைக்காக அதிகளவிலான மக்கள் உத்தம்பாளையம் அரசு மருத்துவமனையை நாட தொடங்கியுள்ளனர். இந்த அரசு பொது மருத்துவமனைக்கு, தினந்தோறும் 800-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்நோயாளிகளாக 72 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. உத்தமபாளையம் மட்டுமல்லாமல் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான உ. அம்மாபட்டி, அனுமந்தன்பட்டி , க. புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், கோகிலாபுரம் , ஆணைமலையன்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊா்களிலிருந்து உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

    இந்த மருத்துவமணையில் அவசர சிகிச்சை பிரிவு உள்பட 20 வகையான மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதால் , இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போது கடும் குளிர் காலம் என்பதாலும் , குடிநீரை மக்கள் காய்ச்சாமல் பருகுவதாலும், மருத்துவமனைக்கு வரும் மக்கள் சுகாதாரமான காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் என்ற முறையில், மருத்துவமனைக்கு வாட்டர் ஹீட்டர் தேவை என்பதை புரிந்துகொண்ட உத்தம்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி தன்னார்வலர்களுக்கு நிலைமையை எடுத்துரைத்து உள்ளார்.

    மருத்துவமனையின் தேவையைப் புரிந்து கொண்ட உத்தமபாளையம் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுல்தான் இப்ராகிம், மருத்துவ அதிகாரியின் சேவைக்கு உறுதுணையாக சுடு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மருத்துவ அதிகாரிகளிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் உத்தமபாளையத்தை சேர்ந்த பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மருத்துவர் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் மருத்துவமனைக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி