Home /local-news /

கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த பொறியியல் பட்டதாரிகள்.. விபத்தில் குழந்தை பலி.. இன்றைய தேனி மாவட்ட செய்திகள்

கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த பொறியியல் பட்டதாரிகள்.. விபத்தில் குழந்தை பலி.. இன்றைய தேனி மாவட்ட செய்திகள்

Theni news

Theni news

Theni District | இன்றைய தேனி மாவட்ட செய்திகளின் முக்கிய தொகுப்பு...

  கால்நடை பராமரிப்பு பணிக்கு விண்ணப்பித்த பொறியியல் பட்டதாரிகள் - சாலை விபத்தில் ஒன்றரை வயது சிறுவன் பலி ; இன்றைய தேனி மாவட்ட செய்திகள் (26/4/22)

  கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த பொறியியல் பட்டதாரிகள் :-

  தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 34 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த 4715 பேருக்கு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற்று வருகிறது.

  தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் வேளாண் விற்பனை வணிக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் 28 ஆம் வரை கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, சைக்கிள் ஓட்டுதல், மாடு பிடித்து கட்டுதல், மாடுகளை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.

  10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்ற கல்வித்தகுதிக்கு இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிகளவில் கால்நடை பராமரிப்பு பணிக்காக விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  மாவட்ட இணை இயக்குனர் சுப்பையாபாண்டியன் மேற்பார்வையில் 6 உதவி இயக்குனர்கள், கால்நடை டாக்டர்கள், 60 அலுவலக பணியாளர்களுடன் முதல் நாளில் 1000 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடந்தது. முதல் நாள் நேர்காணலில் பங்கேற்பதற்காக ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 575 பேர் பங்கேற்று உள்ளனர்.

  சிலம்ப போட்டி :-

  தேசிய அளவிலான ஸ்கூல் கேம்ப் ஆக்டிவிட்டி டெவலப்மென்ட் பெடரேஷன் அமைப்பின் சார்பில் டெல்லி முங்கேஸ்பூர் தனியார் பள்ளியில் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 15 முதல் 17 வரை நடந்தன. இதில் தமிழ்நாடு அணி சார்பில் அரண்மனைப்புதுார் பயிற்சியாளர்கள் பாண்டி, கண்ணனிடம் பயிற்சி பெற்ற சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர். கனிஷ்கா ஸ்ரீ, யாழினி, வாசுராஜ், சித்திக் ரோஷன், சக்திதார் உள்பட 15 பேர் இவர்கள் சிலம்ப போட்டிகளிலும் பங்கேற்று ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் டிராபி, தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

  வேலைநிறுத்தம் :-

  தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் டிராக்டர், டிப்பர், ஜேசிபி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கிராவல் குவாரிகள், காளவாசல், கல்குவாரிகள் மற்றும் எம். சாண்ட், கிரஷர், ஜல்லி கற்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு விலைக்கு குவாரிகளில் அதிகமான விற்கப்படுகிறது எனவும் , குறைவாக அனுப்புகை சீட்டு பெற்று செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பெறுவதாக கூறியும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது

  மாவட்டத்தில் உள்ள எம்.சாண்ட் நிறுவனங்கள் கேரளாவில் இருந்து வரும் சுமார் 10 யூனிட் அளவு கொண்ட கனரக அவர்களில் தினமும் 200க்கும் மேற்பட்ட கேரள பதிவு எண் கொண்ட வண்டிகளுக்கு திருட்டுத்தனமாக எம் சாண்ட் ஜல்லி கற்கள் போன்ற கனிமங்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது .

  அதிக விலை கொடுத்து கேரளத்துக்கு எடுத்துச் செல்வதால் தேனி மாவட்டத்தில் கட்டுமானத்திற்கு தேவையான ஜல்லி விலை அதிகரித்து கொண்டே செல்கிறது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கவனத்தில்
  கொண்டு சென்று கேரளாவுக்கு அனுப்பப்படும் எம்சாண்ட், ஜல்லி போன்றவைகள் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், கல்குவாரிகள் அரசு கொடுக்கும் ஒரு சீட்டுக்கு மட்டும் பணத்தை செலுத்திவிட்டு அரசு அனுமதியின்றி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்து கின்றனர் இதனால் அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வேலை நிறுத்தத்தில் நூற்றுக்கு அதிகமான டிப்பர் லாரிகளுடன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் .

  சாலை விபத்து :-

  தேனி மாவட்டம் கோட்டூரில், சரக்கு ஏற்றிச்செல்லும் மினி சரக்கு வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்ததால் கிராமத்தில் நிலவும் சோகம். கோட்டூர் தெற்கு தெருவில் வசித்து வரும் காஞ்சி என்பவரின் மகனான ஒன்றரை வயதாகும் சிபிஷ், தன் வீட்டின் முன்பு சாலையில் தவழ்ந்து விளையாடி கொண்டு இருந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் சிறுவனின் மீது எதிர் பாராமல் மோதியது. இந்த விபத்தில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தான். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை தர்மபுரியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவம் அறிந்து வீரபாண்டி காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  இப்தார் நோன்பு :-

  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தி.மு.க. சார்பில் நேரன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தேனி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான, ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் பேருராட்சி மன்ற தலைவர் முகமது அப்துல் காசிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், உணவு, நோன்பு கஞ்சி உள்ளிட்டவை பரிமாறப்பட்டது.

  ஊக்கப்பரிசு :-

  தேனி மாவட்டம் தேவாரம் தங்கராஜ் நினைவு தொண்டு நிறுவனத்தின் சார்பாக தேவாரம் அருகிலுள்ள டி. சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளான பைந்தமிழ் ரோஷினி, செந்தமிழ் சாமினி, முத்தமிழ் சாலினி ஆகிய மூவரும் சாதனை படைத்தற்காக தொண்டு நிறுவனத்தின் சார்பாக மெடல், படிப்பிற்குரிய உபகரணங்கள் கொடுத்தும் சால்வை அணிவித்தும் கௌரவ படுத்தப்பட்டது. திருக்குறளில் உலக சாதனை படைத்த இக்குழந்தைகள் தற்பொழுது தொல்காப்பியத்திலும் சாதனை படைத்துள்ளார்கள் அவர்களை பாராட்டி தமிழக முதல்வர் ஊக்கத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளார்.

  குடியிருப்பு பகுதிக்குள் நல்லபாம்பு :-

  தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் காந்திநகர் முதல் தெருவில் வசித்து வரும் கோபி கண்ணன் என்பவர் வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் விரைந்து சென்ற அதிகாரி சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு துறையினர் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். குடியிருப்பு பகுதிக்குள் நல்ல பாம்பு இருந்தது அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி