Home /local-news /

கம்பம் : களைகட்டிய மகளிர் தின கலை நிகழ்ச்சிகள்

கம்பம் : களைகட்டிய மகளிர் தின கலை நிகழ்ச்சிகள்

Women's

Women's day

Womens Day at Celebration at Cumbum | மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விழா நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

    மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விழா நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

    கலை நிகழ்ச்சிகள் :-

    உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகளிர் தினத்தன்று மகளிரை ஊக்கப்படுத்தி அவர்களைப் போற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .

    அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள நேதாஜி அறக்கட்டளை தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 50 பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக , பாராட்டு விழாவும் பரிசுகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உக்ரைன் நாட்டிலுள்ள கார்கிவ் நேஷனல் விமானப்படை பல்கலைக்கழகத்தில் Air craft maintenance Engineering முடித்த தேனி மாவட்டத்தை சேர்ந்தவிமான பைலட் உதய கீர்த்தனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தான் பெற்ற அனுபவங்களை பெண்களிடம்எடுத்துக் கூறினார்.

    மேலும் பெண்களுக்கு நடனம் ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி பட்டிமன்றம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பெண்கள் தலைமையேற்று நடத்தினர் .

    உத்தம்பாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் உள்ள சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என பேசினார்.
    மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் சாதனை செய்த பெண்களும், காவல்துறை அதிகாரிகளும், முன்னாள் நீதிபதி,ஏராளமான பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni, Women's Day

    அடுத்த செய்தி