Home /local-news /

கம்பம் : சில்லறை காசுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்

கம்பம் : சில்லறை காசுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்

மத்திய

மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையிலும், பொது மக்களிடம் பணப்புழக்கம் இல்லை என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவும் சில்லறைக் காசுகளைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து டெபாசிட் தொகை கட்ட வந்ததாக ரம்யா ஆனந்த் கூறினார்.

    கம்பம் நகராட்சியில் 30 -வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், டெபாசிட் தொகையை சில்லறை காசாக கொண்டு வந்தார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கம்பம் நகராட்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடைசி நாளான  நேற்று  வேட்புமனு தாக்கல் செய்தனர். கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, கம்பம் நகராட்சியில் உள்ள 30 வது வார்டில் திமுக சார்பாக போட்டியிடும் ரம்யா ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகத்தில் மஞ்சப்பை நிறைய சில்லறை காசுகளுடன் வந்தார்.

    மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையிலும், பொது மக்களிடம் பணப்புழக்கம் இல்லை என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவும் சில்லறைக் காசுகளைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து டெபாசிட் தொகை கட்ட வந்ததாகக் கூறினார்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நகராட்சி அலுவலகம், பரபரப்பாக இருக்கும் நிலையில், சில்லறை  காசுகளாக டெபாசிட் தொகையை கட்டினால் அவற்றை கையாளுவது சிரமம் என்று தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் டெபாசிட் தொகையை சில்லறையாக கட்டாமல் பணமாக கட்டினார் ரம்யா ஆனந்த் .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Theni

    அடுத்த செய்தி