Home /local-news /

கூடலூர் : வெட்டுக்காடு பகுதிகளில் தொடரும் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் 

கூடலூர் : வெட்டுக்காடு பகுதிகளில் தொடரும் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் 

Elephant attack 

Elephant attack 

கூடலூர் : வெட்டுக்காடு பகுதிகளில் தொடரும் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்


தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு மலை அடிவாரப் பகுதிகளில், காட்டு விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

காட்டு விலங்குகள் :-

கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது, தேனி மாவட்டம். குறிப்பாக போடி, கம்பம், தேவாரம், கோம்பை,
குள்ளப்பகவுண்டன்பட்டி,
லோயர்கேம்ப், என மலையடிவாரங்களை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது.  வனப்பகுதியில் வசிக்கும் காட்டு விலங்குகளான மான், யானை போன்ற விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரங்களில் சுற்றித் திரிகின்றன.

இதனை தடுப்பதற்காக வனத்துறையினரால் மலையடிவார வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலிகள், அகழிகள் வெட்டப்பட்டும் உள்ளன. ஆனாலும், காட்டு விலங்குகள் அகழிகளை கடந்து வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவதும், அவ்வாறு வரும் வன விலங்குகளை வனத்துறையினரும், பொதுமக்களும் சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டுவது தொடர்கதையாக இருந்த வண்ணம் உள்ளது.


அச்சத்தில் மக்கள் :-

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு மலை அடிவாரப் பகுதியில் விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் உள்ளே நுழைந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. சுருளியாறு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கடமான்குளம் பகுதியில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  வனத்துறையினருக்கு காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்வதை எடுத்துரைத்த அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினரும் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவ்வப்போது வெட்டுக்காடு பகுதியில் வன விலங்குகளின் அட்டகாசம் தொடர்கிறது என்ற காரணத்தினால்கிராம மக்கள் அகழியை அகலப்படுத்த வேண்டும் எனவும், மின் வேலி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்


இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே உள்ள பழியங்குடி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன் வைக்கின்றனர்.


செய்தியாளர்: சுதர்ஸன்
Published by:Murugesh M
First published:

Tags: Theni

அடுத்த செய்தி