Home /local-news /

தேனி : "வீட்டை ஏன் திறந்து போட்டுள்ளீர்கள்" - அட்வைஸ் செய்த திருடர்

தேனி : "வீட்டை ஏன் திறந்து போட்டுள்ளீர்கள்" - அட்வைஸ் செய்த திருடர்

Radhakrishnan 

Radhakrishnan 

தேனி - பழனி செட்டிப்பட்டி காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருடன் அளித்த வாக்குமூலம், இணையத்தில் நகைச்சுவை பேசு பொருளாக மாறி அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. 

    தேனி - பழனி செட்டிப்பட்டி காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருடன் அளித்த வாக்குமூலம், இணையத்தில் நகைச்சுவை பேசு பொருளாக மாறி அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.

    வாக்குமூலம் :-

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் 33 வயதாகும் ராதாகிருஷ்ணன். இவர், எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளார். தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடியதாக கூறி ராதாகிருஷ்ணனை ஊர்மக்கள் அடித்து, உதைத்து பி.சி பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அப்போது, பிடிபட்ட ராதாகிருஷ்ணன் காவல்துறையினரிடம் அளித்த வாக்கு மூலம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    வீடியோ வாக்குமூலத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த தாகவும் அதனால் திருடுவதற்காக வாய்ப்பை மக்களே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    மேலும், கவித்துவமாக பேசிய அவர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை கூறி வாக்குமூலம் அளித்ததும் வீடியோவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அந்த நபர் , தான் கஞ்சாவிற்கு அடிமையானதாகவும், தனது சகோதரர் ராணுவத்தில் இருப்பதாகவும் கூறினார்.

    மேலும், முதல்வரின் முதல் 200 நாட்கள் ஆட்சிக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தும் உள்ளார். திறந்து இருந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு ஆண்டிபட்டி கணவாய் வழியாக வரும்போது வண்டியின் செயின் அருந்து விட்டதால் அங்கேயே நிறுத்திவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.

    ராதாகிருஷ்ணனின் வாக்குமூலம் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது .தொடர்ந்து கஞ்சா பழக்கம் உள்ளதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் எனவும், இவர் பல இரு சக்கர வாகனங்களை திருடி உள்ளார் எனவும் விசாரணையின் இறுதியில் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

    மேலும், இருசக்கர வானத்தை திருடிவிட்டு பணத்திற்காக விற்பது இல்லை எனவும் , இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    டீக்கடை அல்லது உணவகத்திற்கு சென்று உணவருந்தி விட்டு காசுக்கு பதிலாக எனது இரு சக்கர வாகனத்தை வைத்துக்கொள்ளுங்கள் என கூறியும் வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் மீது மதுரை உசிலம்பட்டி தேனி ஆகிய காவல் நிலையங்களில் புகார் உள்ளது எனவும் கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

    சில நாட்களுக்கு முன்பு தேனி பகுதியில் திறந்திருந்த வீட்டிற்குள் சென்று வீட்டை ஏன் திறந்து போட்டு உள்ளீர்கள் இதுவே திருடுவதற்கான காரணமாக அமைகிறது என வீட்டினருக்கு அட்வைஸ் கொடுத்துவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி