தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நுண் உரக் கூடம் தற்போது வரை செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
மைக்ரோ உரக் கூடம் :-
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது மைக்ரோ உரக்கூடம். இந்த உரக்கூடம் கட்டப்பட்டு தற்போது வரை திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர் நகராட்சியில் சேகரமாகும் குப்பையிலிருந்து மக்கும், மக்காத குப்பை என பிரித்து வாங்கி, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்க மைக்ரோ உரக்கூடம் கட்டப்பட்டது. குப்பையை முறையாக கையாளாமல் துப்புரவு பிரிவு செயல்படுவதால், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாமிகுளத்தில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மைக்ரோ உரக்கூடம் கட்டியதிலிருந்தே பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ உரக் கூடத்தில் உள்ள இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது . நகருக்குள் சேகரமாகும் குப்பைகளை சிலர் ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சின்னமனூர் நகராட்சி சார்பில் மைக்ரோ உரக்கூடங்களை செயல்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.