தேனி மாவட்டத்தில் மழைப் பொழிவு இல்லாத காரணத்தால், மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வண்ணம் உள்ளது.
நீர்மட்டம் :-
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள் ...
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 68.31 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 276 கனஅடியாக உள்ளது. 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 39.70 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து எதுவும் இல்லை. 65 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 99.71 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லை. 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 26.15 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லை. நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
142 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ளது. நீர்வரத்து 122 கன அடி. 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.