Home /local-news /

தேனி : தையல் கடைகளில் அலைமோதும் கூட்டம் - காரணம் என்ன தெரியுமா?

தேனி : தையல் கடைகளில் அலைமோதும் கூட்டம் - காரணம் என்ன தெரியுமா?

Tailor 

Tailor 

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், தங்களது கட்சி சின்னம் , எம்ராய்டிங் செய்த வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி தைப்பதற்கு தையல் கடைகளில் குவிந்து வருகின்றனர் .

    தேனி : தையல் கடைகளில் அலைமோதும் கூட்டம் - காரணம் என்ன தெரியுமா?


    உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், தங்களது கட்சி சின்னம் , எம்ராய்டிங் செய்த வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி தைப்பதற்கு தையல் கடைகளில் குவிந்து வருகின்றனர் .


    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :-


    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக போன்ற பிரதான காட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளில் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கடும் போட்டி நிலவியது. பின்பு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தும் உள்ளனர்.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் திரும்பப் பெற கால அவகாசம் முடிவடைந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியகியது.


    சில வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். பல்வேறு பகுதிகளில் போட்டியின்றி பலர் தேர்வு செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, அரசியல் களம் சூடான நிலையில், இதர வேட்பாளர்கள் தங்களது பிரச்சார வியூகங்களை வகுத்து வாக்கு சேகரிக்க தொடங்கி, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.


    பொதுவாக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், வெள்ளை சட்டை, கட்சியின் கொடி போன்ற கரை அணிந்த வெள்ளை வேஷ்டி போன்றவைகளின் மூலம் தாங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாமல் வெளி காட்டுவர் .

    தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது சின்னம் , கொடியை மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

    தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதால் கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து தங்களது விருப்ப வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க செல்கின்றனர்.

    இதனால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் , தங்களின் கட்சித் தலைவர் அல்லது கட்சி கொடி போன்றவற்றை வெள்ளை சட்டையில் எம்ராடிங் செய்து அணிந்து வாக்கு சேகரிக்க சென்று வருகின்றனர்.

    குறிப்பாக, சுயேட்சை வேட்பாளர்கள் அரசியல் யூனிஃபார்ம் எனப்படும் வெள்ளை சட்டை , வெள்ளை வேஷ்டி அணிந்து வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளனர்

    பெரும்பாலான தையல் கடை களில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி வைப்பதற்காக அலை மோதி வருகின்றனர்.

    தேர்தல் நேரத்தில் தான் வருமானத்தை பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் இரவு, பகலாக சில இடங்களில் தையல் கடைக்காரர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மறைமுகமாக பல நன்மைகள் ஏற்பட்டாலும், இந்த தேர்தலில் தையல் கடைக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி