Union
Budget 2023

Highlights

ஹோம் /Local News /

தேனி வீரபாண்டி திருவிழா.. வாகனங்களுக்கு மாற்று பாதை ஏற்பாடு! - முழு விவரம் இதோ!

தேனி வீரபாண்டி திருவிழா.. வாகனங்களுக்கு மாற்று பாதை ஏற்பாடு! - முழு விவரம் இதோ!

Veerapandi festival 

Veerapandi festival 

Theni Veerapandi Thiruvizha: தேனி வீரபாண்டி கோவில் திருவிழா நாளை (மே 10) தொடங்கவுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல தேனி மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா இந்த ஆண்டு மே மாதம் 10 தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகப் புகழ்பெற்ற வீரபாண்டி சித்திரை திருவிழா ஏழு நாட்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலுக்கு திருவிழாக்காலங்களில் தினசரி 50,000ற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வர். இதனால் போக்குவரத்துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதும் வழக்கம்.

பெரியம்மை, சின்னம்மை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டி பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேசமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபட்டு, சித்திரைத் திருவிழா நடத்துவது கோயிலின் தனிச்சிறப்பாகும்.

கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இத்திருவிழாவிற்கு பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. திருவிழா நடைபெற கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது முதல் நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே காணப்பட்டது.

திட்டமிட்டபடி திருவிழா :-

இந்த ஆண்டு திட்டமிட்டபடியே திருவிழா வருகின்ற 10.05.2022 முதல் ஸ்ரீ கௌமாரியம்மன் 17.05.2022 கொண்டாடப்படவுள்ளது.

இதனையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் என்பதால் , இக்கோயிலுக்கு கூடுதலான போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருவிழா சமயங்களில் தினந்தோறும் சுமார் 50000 பக்தர்களுக்கு மேல் வந்து செல்வார்கள் என்றும் உளவுத் துறை சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்களுக்காகவும் உள் மாவட்ட மக்களுக்காகவும் சிறப்பு பேருந்து வசதி அரசு போக்குவரத்து துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதை :-

திருவிழா நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தேனியிலிருந்து உத்தமபாளையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உப்புக்கோட்டை விலக்கு முன்பு திருப்பப்பட்டு மாற்று வழியாக குச்சனூர், மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் (அ) உத்தமபாளையம் சென்றடையவும்,

அதே போன்று சின்னமனூரில் இருந்து தேனி மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உப்பார்பட்டி விலக்கு முன்பு திருப்பப்பட்டு மாற்று வழியாக தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் வழியாக தேனி சென்றடையவும் காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்று வழித்தடங்கள் 10.05.22 காலை 06.00 மணி முதல் 17.05.22 நள்ளிரவு வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறும் தேனி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

செய்தியாளர் : சுதர்ஸன்

First published:

Tags: Theni