Home /local-news /

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கம்பம் நட்டாச்சு... கொண்டாட்டத்துக்கு தயாராகும் தேனி மக்கள்..

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கம்பம் நட்டாச்சு... கொண்டாட்டத்துக்கு தயாராகும் தேனி மக்கள்..

Veerapandi

Veerapandi temple 

Veerapandi Gowmariamman Temple Festival | தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற கௌமாரியம்மன் திருக்கோயில் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற கௌமாரியம்மன் திருக்கோயில் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றுதன் பின்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது..

    கௌமாரியம்மன் கோவில் திருவிழா :-

    தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.‌ விழாவின் இரண்டாம் நாளில் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்ற முடிந்தது.

    முல்லைப் பெரியாற்றில் இருந்து அலங்கரித்து எடுத்து வரப்பட்ட கம்பம் கோவில் முன்பாக ஊன்றப்பட்டது. இதையடுத்து கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

    இன்று முதல் 21 நாட்கள் விரதத்திற்கு பின் மே 10முதல் 17ஆம் தேதி வரை இரவு - பகலாக நடைபெறும் திருவிழாவில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்வார்கள்.
    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்துள்ளனர்.

    தற்போதைய வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் விழாக்காலம் களைகட்டி உள்ளதால், ஏராளமான பக்தர்கள் தினசரி கோவிலுக்கு வந்து கௌமாரி அம்மனை தரிசித்து சென்று வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது இத்திருவிழா . விழாவில் மூன்றாவது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து கௌமாரி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி