உத்தம பாளையம் பகுதியில் மதிய வேளையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 1,28,000 பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள 18 வது வார்டு கே.ஆர் குளம் பகுதியில் வசித்து வருகிறார் , நாற்பத்தி ஐந்து வயதாகும் ஜெயா. இவர் நேற்று மதியம் தனது வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் . விசேஷ வீட்டிருக்கு சென்று திரும்பிய ஜெயா தனது வீட்டின் வெளிக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 1,28,000 ரொக்கப்பணம் மற்றும் 1/2 பவுன் எடையுள்ள தங்க மோதிரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது .
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஜெயா, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து , விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் 12 மணிக்கு வெளியே சென்று 2 மணிக்கெல்லாம் ஜெயா வீடு திரும்பியுள்ளார். எனவே, அந்த நேரத்தில் அப்பகுதியில் நடமாடியவர்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.