Home /local-news /

உத்தமபாளையம் : குப்பை கிடங்கினால் பல சிக்கல்கள் - நிரந்தர தீர்வு எதிர்பார்க்கும் தாமஸ் காலனி மக்கள்

உத்தமபாளையம் : குப்பை கிடங்கினால் பல சிக்கல்கள் - நிரந்தர தீர்வு எதிர்பார்க்கும் தாமஸ் காலனி மக்கள்

Garbage 

Garbage 

உத்தமபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கினால், துர்நாற்றம், தொற்று நோய் பரவுதல், சுகாதாரக் கேடு ஏற்படுவது போன்ற பல்வேறு சிக்கல்கள் இர

    உத்தமபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கினால், துர்நாற்றம், தொற்று நோய் பரவுதல், சுகாதாரக் கேடு ஏற்படுவது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருப்பதினால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற தாமஸ் காலனி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    குப்பை கிடங்கு :-

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள தாமஸ் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உத்தமபாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.

    உத்தமபாளையம் பகுதியில், இந்த குப்பை கிடங்கு அமைக்கப்பட்டபோது தாமஸ் காலனி பகுதியில் குறைந்த அளவிலான குடியிருப்புகளே இருந்ததாக கூறப்படுகிறது.


    இந்தக் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி உள்ளதால், குப்பை கிடங்கில் சுற்றுப்புற சுவர் முழுவதும் சேதமடைந்தது , பெரும்பாலான சுவர் இடிந்து சுவர் இல்லாத நிலையில் காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையினால் முழுமையாக சுவர் சேதமடைந்துள்ளது.

    இந்த நிலையில், தற்போது தாமஸ் காலனி பகுதியில் குடியிருப்பு பகுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குப்பை கிடங்கை சுற்றி அதிக அளவிலான வீடுகள் காணப்படுகிறது. குப்பைக் கிடங்கில் சுற்றுப்புறத்தில் சுவர் இல்லாத காரணத்தினால், காற்றில் குப்பை கூளங்கள் பறந்து வீட்டுக்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், மழைக்காலங்களில் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், வெயில் காலங்களில் குப்பை கிடங்கில் தீ பிடித்து குப்பைகள் எரிவதால் அதிக அளவிலான நச்சு வாயு வெளியேறி வருவதாகவும் கூறுகின்றனர். இதனால், அந்த பகுதியில் தொற்றுநோய் பரவுவதாக கூறுகின்றனர் தாமஸ் காலனி மக்கள்

    இதனால், முற்றிலும் சுற்றுப்புற சுவர் சேதமடைந்து காணப்படும் குப்பை கிடங்கை உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி