Home /local-news /

தேனி மாவட்டத்துலயே உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரிக்கு மட்டும் தான் இப்படி ஒரு அங்கீகாரம்!!

தேனி மாவட்டத்துலயே உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரிக்கு மட்டும் தான் இப்படி ஒரு அங்கீகாரம்!!

HKRHC 

HKRHC 

Theni Hajee Karutha Rowther Howdia College | தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரிக்கு NAAC அமைப்பு உயர்தர மதிப்பிடான A++ வழங்கியுள்ளது.

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அமைப்பால் (National Assessment and Accreditation Council - NAAC) உயர்தர மதிப்பிடான A++ வழங்கப்பட்டுள்ளது.

    NAAC குழு ஆய்வு :-

    தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு (NAAC) இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பாகும்.

    இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    NAAC அமைப்பின் தர ஆய்வு முடிவில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு, நிறுவனங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் குறித்த மதிப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது A , A+ , A++, B , B+ , B++, C, D என்ற ஆங்கில எழுத்துகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.

    3.51 - 4.00 தர புள்ளிகள் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு A என்ற உயர் தரச்சான்று வழங்கப்படும். அதற்கு குறைவாக தர புள்ளிகள் பெரும் கல்வி நிறுவனங்களுக்கு அதற்கேற்றார் போல் மதிப்பீடு வழங்கப்படுவது வழக்கம்.

    கல்வி நிறுவங்களில் மாணவர்களின் செயல்பாடு, உட்கட்டமைப்பு, நிர்வாகத் திறன், பாடத்திட்டம், கல்வி நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், ஆய்வகங்கள், வெளி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறப்பான முறையில் செயலாற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே A++ தரச்சான்று NAAC அமைப்பினரால் வழங்கப்படுவது வழக்கம்.

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பின்பாக விண்ணப்பித்த கல்வி நிறுவனங்களுக்கு கல்வியாளர்கள் சென்று ஆய்வு செய்த பின்னர் தேசிய தர மதிப்பீட்டை வழங்குவர்.

    உயர்ரக மதிப்பீடு :-

    அந்த வகையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெற விண்ணப்பித்ததன் பேரில் கல்வியாளர்கள் ஆய்வு செய்து தர மதிப்பீட்டை வழங்கியுள்ளனர்.

    Hajee Karutha Rowther Howdia College


    திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் உதயகிரி ராஜேந்திரா தலைமையில், அசாம் தேஜ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் தெபர்சிநாத், பஞ்சாப் மாதா குஜ்ரி கல்லூரி முதல்வர் காஷ்மீர் சிங் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழு மார்ச் மாதம் 30, 31ம் தேதிகளில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவ்தியா கல்லூரியை தர மதிப்பீடு செய்ய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    கல்லூரியின் செயலாளர் தர்வேஷ் முகைதின், மேலாண்மை குழு தலைவர் செந்தில் மீரான், கல்லூரி முதல்வர் முகமது மீரான் ஆகியோர் மூவர் குழுவிற்கு கல்லூரி பற்றிய முழு விவரங்களையும், ஆய்வுப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கி கூறினர்.

    இதையும் படிங்க:  கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா.. பளியன்குடி மலை அடிவாரத்தில் கொடியேற்றம்

    அதன் பின்பு ஆய்வு மேற்கொண்ட மூவர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்ததில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிக்கு உயர் தர மதிப்பீட்டான A அந்தஸ்தை வழங்கியது. தேனி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இந்தக் கல்லூரி மட்டும்தான் A++ அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர் கூட்டம்:-

    இதுகுறித்து கல்லூரி முதல்வரான முகமது மீரான் கூறுகையில், \"எங்கள் கல்லூரி 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களான கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் உயர்கல்வியை பெரும் நோக்கில் இக்கல்லூரி தொடங்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே சிறுபான்மையினர், ஏழை எளிய மக்கள், விவசாய குடும்பத்தினர், உயர் கல்வியை பெறவேண்டும் என்பது தான்.

    இக்கல்லூரியில் இன்றளவும் பயிலும் மாணவர்கள் பலரும் முதல் தலைமுறை பட்டதாரியாக உள்ளனர். பல மாணவர்களை முதல் தலைமுறை பட்டதாரியாக ஆக்கிய பெருமை இக்கல்லூரியை சேரும்.

    இதையும் படிங்க:   தேக்கடி : தொடங்கியது 14 வது மலர் கண்காட்சி - குழந்தைகளைக் கவரும் பல்வேறு விஷயங்கள் உள்ளடக்கம் முழு விவரம் இதோ!

    2006 மற்றும் 2012 ஆண்டு இக்கல்லூரி தேசிய தர மதிப்பீடு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு A++ தர மதிப்பீட்டை பெற்றது. இந்த ஆண்டு A++ அந்தஸ்து கிடைத்துள்ளது.

    தேனி மாவட்டத்தில் A++ தரம் பெற்றது இந்த கல்லூரி மட்டும்தான். மதுரை மண்டல அளவிலேயே மிகவும் குறைவான கல்லூரிகள் மட்டுமே A++ மதிப்பீட்டை பெற்றுள்ள நிலையில், நகர்ப்புற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஈடாக கிராமப் பகுதியில் உள்ள கல்லூரி A++ அந்தஸ்து பெற்றுள்ளது. மேலும் மாணவர்களுக்கான கல்வித் தரத்தை மேலும் அதிகப்படுத்த நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரி
    A++ மதிப்பீட்டை பெற்றுள்ளதால், ஆசிரியர் மற்றும் நிர்வாக குழு அடங்கிய கூட்டம் இன்று நடைபெற்றது\" என்றார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Education, Theni

    அடுத்த செய்தி