தேனி : நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்
தேனியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ 259.82 கோடி மதிப்பில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது
நலத்திட்ட உதவி வழங்கும் விழா :- தேனி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,சமுக நலத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.114.21 கோடி மதிப்பிலான 40 முடிவுற்ற திட்டப்பணிகளின் தொடக்கம் மற்றும் 74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 71.4 கோடி மதிப்பில் 10 ஆயிரத்து 427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மாநாட்டு பந்தலில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறை ஊரக வளர்ச்சித் துறை சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டுமனைப்பட்டா, இலவசதையல் மிஷின், மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி, கூட்டுறவுதுறை பயிர் கடன் மகளிர் சுய உதவிக்குழுகான சுழல்நிதி, போன்ற நலத்திட்டங்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இவ் விழாவில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மு க ஸ்டாலின், திமுக சார்பில் செய்யப்பட்ட திட்டப்பணிகள் குறித்தும் செய்யப்பட உள்ள பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் திமுக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற உள்ள நிலையில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பான்மையை நிறைவேற்றி விட்டது. இன்னும் ஒரு சில வாக்குறுதிகளை விரைவில் திமுக நிறைவேற்றும் என்றார் .
தேனி அன்னஞ்சி விலக்கு பகுதி, ஊஞ்சாம்பட்டியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற தொகுதிகளை ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தேனி மாவட்ட ஆட்சியர், திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.