Home /local-news /

தேனி : முடிவடையாத கூடலூர் நெடுஞ்சாலை ஜங்ஷன் பணி! விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி!

தேனி : முடிவடையாத கூடலூர் நெடுஞ்சாலை ஜங்ஷன் பணி! விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி!

Police station 

Police station 

தேனி மாவட்டம் கூடலூர் அருகே டிப்பர் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே முடிவடையாத நெடுஞ்சாலை பணியால்,  டிப்பர் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில்,  சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாகன விபத்து :-

    தேனி மாவட்டத்தில் தற்போது தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகள் 90% நிறைவடைந்த நிலையில் கூடலூர் பகுதியில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் லோயர் கேம்பில் இருந்து கூடலூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. அதேபோல, லோயர் கேம்பில் இருந்து கூடலூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் இரு நபர்கள் வந்துள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் மற்றும் நாகராஜ் என்பவர் பயணித்துள்ளனர். இருசக்கர வாகனத்தை நாகராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    நெடுஞ்சாலையில் இருந்து கூடலூர் பகுதிக்குள் செல்வதற்கு ஜங்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முழுமையான பணிகள் முடிவடையாத ஜங்சன் பகுதியில் டிப்பர் லாரியை ஓட்டி வந்த நபர் உள்ளூர் என்பதால், கூடலூர் நகர்ப் பகுதிக்குள் செல்வதற்கான சரியான பிரிவில் வாகனத்தை இயக்கி உள்ளார்.

    அப்போது, இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரு நபர்களும் வெளியூர் என்பதால் சரியான பிரிவில் செல்லாமல், மாற்று பிரிவில் சென்று நேராக டிப்பர் லாரியில் நடுப்பகுதியில் மோதியுள்ளனர்.

    இருசக்கர வாகனம் டிப்பர் லாரியின்மீது  மோதிய விபத்தில் இருவரும் கீழே விழுந்தது காயங்கள் ஏற்பட்டுள்ளன.

    காவல்துறையினர் விசாரணை :-

    ஆனால், இரு சக்கர வாகனத்தில் பின்னால் பயணித்த நபர், வாகனம் மோதி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    டிப்பர் லாரியை ஓட்டி வந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    இருசக்கர வாகனத்தில் பயணித்த ஸ்ரீதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜ் மேற்சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து, கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி