Home /local-news /

சுருளி அருவி : காட்டுத்தீயை கட்டுப்படுத்த வன காவலர்களுக்கு பயிற்சி

சுருளி அருவி : காட்டுத்தீயை கட்டுப்படுத்த வன காவலர்களுக்கு பயிற்சி

Suruli

Suruli falls

கம்பம் கிழக்கு வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சுருளி அருவி அருகே உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ ஏற்பட்டு ஏராளமான உயர் ரக மரங்கள் எரிந்து தீக்கிரையாகி வருகிறது. இதை தடுப்பது தொடர்பாக வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக வன காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு அரிய வகை உயிரினங்களும், காட்டு மரங்களும், சந்தனம், தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட  பல அரிய வகை மரங்களும் உள்ளன.

    மேலும் இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், கரடி, சிங்கவால் குரங்கு ,அரியவகை மர அணில் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் அதிகளவில் வாழ்கின்றன.

    இந்நிலையில் கோடை காலம் என்பதால் கடும் வெப்பத்தினால் கம்பம் கிழக்கு வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சுருளி அருவி அருகே உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ ஏற்பட்டு ஏராளமான உயர் ரக மரங்கள் எரிந்து தீக்கிரையானது.

    இதனை தடுக்கும் விதமாக வனப்பகுதியில் தீத்தடுப்பு குறித்து வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்ட வனத்துறை சார்பில், அனைத்து வனச்சரகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி சுருளி அருவி பகுதியில் கம்பம் கிழக்கு வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வன ஊழியர்களுக்கு, தீ தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தீ அணைப்பது, தீத்தடுப்பு காவலர்கள் செய்ய வேண்டிய பணிகள், முதலுதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த தீ தடுப்பு பணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தீ தடுப்பு வனகாவலர்கள் கலந்து கொண்டு வனப்பகுதிகளில் தீயை அணைப்பது பற்றி பயிற்சியில் ஈடுபட்டனர் .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி