தேனி : புகைப்படம் எடுத்தால் பரிசு உண்டு - போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு
தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து நடைபெறும் புகைப்பட போட்டியில் பங்கேற்க தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராம்சார் ஒப்பந்தம் :-
ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் நகரில் முக்கிய 18 நாடுகள் கலந்து
கொண்ட , எஸ்கண்டர் பெரோஸ் தலைமையிலான முக்கிய கூட்டம் நடைபெற்றது. 1971-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி, நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகளாவிய ஈர
நிலங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தம்
கையழுத்திடப்பட்டது.
அதை \"ராம்சார் ஒப்பந்தம்' என்றும், அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளான பிப்ரவரி 2-ஆம் தேதி உலக ஈர நிலங்கள் விழிப்புணர்வு
தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ராம்சார் ஒப்பந்தம் மூலம் உலக நாடுகள், ஈர நிலங்களின் தன்மையை கெடாமல் பாதுகாத்து நிலைபெற்று நீடிக்கச் செய்ய வேண்டும் என கையெழுத்தானது.
1982-ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இந்தியா, ஒவ்வொரு பிப்ரவரி 2-ஆம் தேதியும் உலக ஈர நிலங்களின் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புகைப்படப் போட்டி :-
இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த புகைப்பட போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு வனத்துறை மூலம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று முதல் (20 - ஆம் தேதி) 26ஆம் தேதிவரை இணையதளம் மூலம் நடைபெறும் ஈர நிலம் தொடர்பான மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஈர நில நண்பர்கள் மற்றம் ஏனையோர் தங்களது புகைப்படம் மற்றும் போட்டி தொடர்பான பதிவுகளை வரும் 26 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் dmuthn@gmail. com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இப்போட்டியில் முதல் மூன்று இடம் பெறுவோரை மாவட்ட அளவில் ஆட்சியரின் தலைமையிலான தணிக்கை குழு தேர்வு செய்ய உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு அளிக்கப்பட உள்ளது. பரிசளிப்பு விழா பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இப் போட்டியில் தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.