Home /local-news /

தேனி: போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சின்னங்கள் பொருத்தும் பணி 

தேனி: போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சின்னங்கள் பொருத்தும் பணி 

Candidate 

Candidate 

கம்பம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

    கம்பம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.


    சின்னங்கள் பொருத்தும் பணி :-


    தேனி மாவட்டம் முழுவதிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஓட்டுப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.


    இன்று கம்பம் நகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் முன்னிலையிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள், வேட்பாளரின் பெயர் பொருத்தும் பணி இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    கம்பம் நகராட்சி ஆணையர் மற்றும் உத்தம்பாளையம் ஆர்டிஓ கௌசல்யா, உதவி தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில், சின்னங்கள் பொருத்தும் பணி பலத்த போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.


    வேட்பாளர்களின் திருப்தியுடன் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்திய பின், அவற்றை நகராட்சி அலுவலகப் பகுதியில் தனியாக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, பின்னர் அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளதாக வும், ஓட்டுப்பதிவிற்கு முதல் நாளில் வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறந்து ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அரை பலத்த போலீசாரின் பாதுகாப்புடன் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் நகராட்சி அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Cumbum, Police, Theni

    அடுத்த செய்தி