Home /local-news /

தேனியில் அதிகரிக்கும் தேநீரின் விலை - புலம்பும் மக்கள்

தேனியில் அதிகரிக்கும் தேநீரின் விலை - புலம்பும் மக்கள்

Tea shop

Tea shop

Theni District: தேனி மாவட்டத்தில் பல இடங்களில் டீ காபி பால் போன்றவைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான சாமானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களுக்கும் சாமானியர்களுக்கும் தங்களது ஓட்டப்பயணத்தில் இன்றியமையாததாக இருப்பவை தேநீர்.

    கடந்த காலங்களில் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிக்கட்ட தற்போதைய காலகட்டத்தில் நிற்கக்கூட ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பெரும்பாலான சாமானியர்கள் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளவில்லை.

    சாமானியர்களுக்கு பலநேரங்களில் உணவாகவும் , பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்களுக்கு வேலைப்பளுவை போக்கும் ஊக்க பானமாக இருப்பவை தேநீர் தான்...

    காலையில் எழுந்ததும், வேலைக்கு செல்லும் போதும், ஓய்வு நேரத்திலும், நண்பர்களை சந்திக்கும் தருணத்திலும் பலருக்கும் தேநீரின் பங்கு முக்கியமானதாக உள்ளது..

    பலர் டீ காபி பால் போன்றவற்றிற்கு அடிமையாக உள்ளனர். மக்களின் அடிப்படைக் உணவாகக் கருதப்படும் டீ காபி வடை போன்றவைகளின் விலை தேனி மாவட்டத்தில் உயர்ந்திருப்பது சாமானியர்களை கடுமையாக பாதித்துள்ளது.

    விலை உயர்வு :-

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கும் பட்சத்தில், ஒரு நபர் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தேநீர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ 12 ரூபாயாக விலை ஏற்றம் கண்டது. தற்போது 3 ரூபாய் விலை ஏற்றப்பட்டு 15 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது. ஏன் ஒரு சில கடைகளில் 20 ரூபாய்க்கு கூட விற்கப்பட்டு வருகிறது.

    15 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபியின் விலை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

    ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட வடை தற்போது பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே நிலைமை தான் இனிப்பு வகைகள், கார வகைகள் மற்றவைகளுக்கும்...

    இனிப்பு கார விலை தற்போது 20 ரூபாய் அதிகரித்துள்ளது . இந்த விலையேற்றம் தற்போது ஏற்பட்டது இல்லை என்றாலும், படிப்படியாக அனைத்து இடங்களிலும் தற்போது விலை ஏற்றம் அடைய தொடங்கி வருகிறது.

    இந்த விலை ஏற்றத்தால் பலரும் தங்களது செலவு கணக்கை அதிகப்படுத்த வேண்டிய தேவையில் உள்ளனர்.

    இதுகுறித்து தேனீர் கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில் , " பால், டீ தூள், சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. வர்த்தக கேஸ் சிலிண்டர் 1200 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 2200 ரூபாய்க்கு விற்பனையாகிறது . சமையல் எண்ணெய் 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருள் விலை உயர்ந்துள்ளதால் மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக சமீபத்தில் உயர்ந்த சொத்து வரி உயர்வு காரணமாக கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பல மறைமுக செலவுகளும் உண்டு.

    பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் கடைகளுக்கு வேலைக்கு வரும் நபர்களுக்கு தினசரி படியும் அதிகமாக வழங்க வேண்டிய தேவை உள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் வேறு வழியில்லாமல் டீ காபி பால் இனிப்பு காரம் போன்றவைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது" என்றனர்.

    உணவகங்களிலும் விலையேற்றமா?

    தேநீர் விலை உயர்வு குறித்து சாமானியர்கள் கூறுகளில், " டீ காபி போன்றவைகளின் விலை சிறிதளவு உயர்ந்து இருந்தாலும் கூட , எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படும். நாங்கள் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே தேநீர் அருந்துபவர்கள் கிடையாது. கேஸ், பெட்ரோல் டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்றவைகளால் அவதிப்படும் எங்களுக்கு டீ காபி விலை உயர்வு பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை அதுவும் வழக்கமான ஒன்றாக தான் பார்க்கிறோம். என்றனர்.

    தற்போது தேநீர் கடைகளில் விலை ஏற்றம் அடைந்துள்ளதை கண்டு, உணவு கடைகளிலும் விலையேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்ளூர் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி