தேனி மாவட்டம் கம்பம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக தனிநபர் விற்பனை செய்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டாஸ்மாக் கடையை மூடல் :-
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் விடுமுறை எனவும், வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 22-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து மதுபான பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை முன் கூட்டியே மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில், விற்பனைக்காக சிலர் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விற்பனை செய்த நபர்களையும் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல் :-
தேவாரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 4 மதுபாட்டில்களையும், அதே பகுதியில் செல்வம் என்ற நபர் வைத்திருந்த 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல், உத்தமபாளையம் பகுதியில் சரத்குமார் என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களையும், ஓடைப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வைத்திருந்த 7 மது பாட்டில்களும், சுருளி நாதன் என்பவர் வைத்து இருந்த 8 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தவிர, கம்பம் பகுதியில் செல்வம் என்பவர் வைத்திருந்த மூன்று பாட்டில்களும் , முத்தையா என்பவர் வைத்திருந்த 8 மது பாட்டில்களும், செவ்வந்தி ராஜா என்பவர் வைத்திருந்த 15 மது பாட்டில்களும்
ராயப்பன்பட்டி பகுதியில் மதியழகன் என்பவர் வைத்திருந்த 12 மது பாட்டில்களும், கருப்பசாமி என்பவர் வைத்திருந்த 9 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.