Home /local-news /

தேனி : துள்ளிக்குதித்து மகிழ்ச்சியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

தேனி : துள்ளிக்குதித்து மகிழ்ச்சியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

Students 

Students 

கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர்

    தேனி : துள்ளிக்குதித்து மகிழ்ச்சியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

    கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர் .


    மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் :-


    கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள், இன்று மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.


    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டன.


    இன்று (பிப்.,1)மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கிருமிநாசினி, முக கவசம் போன்றவைகளை ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு வெப்பமானி கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளிகளில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.


    நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருவதை காண முடிகிறது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Government school, Theni

    அடுத்த செய்தி