முகப்பு /Local News /

வாடிக்கையாளர்களை கவர்ந்த மஞ்சள் நிற தர்பூசணி... விற்பனை அமோகம்    

வாடிக்கையாளர்களை கவர்ந்த மஞ்சள் நிற தர்பூசணி... விற்பனை அமோகம்    

X
Watermelon 

Watermelon 

theni |விலாசா மிதுலா என்ற புதிய ரக மஞ்சள் நிற தர்பூசணி தேனி மாவட்டத்தில் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. அதிக இனிப்பு மற்றும் நீர்ச்சத்து கொண்டதால் பொதுமக்கள் வெகுவாக புதிய ரக தர்பூசணியை வாங்கி செல்கின்றனர்.

  • Last Updated :

விலாசா மிதுலா என்ற புதிய ரக மஞ்சள் நிற தர்பூசணி தேனி மாவட்டத்தில் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. அதிக இனிப்பு மற்றும் நீர்ச்சத்து கொண்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் புதிய ரக தர்பூசணியை வாங்கி செல்கின்றனர்.

மஞ்சள் நிற தர்பூசணி :-

கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்ள தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்துவர். இதன் காரணமாக அவற்றின் விற்பனையும் கோடை காலத்தில் அதிகரித்து காணப்படும்.

அந்தவகையில்,  தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர், கூடலூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், தர்பூசணி வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் முடிந்து மே மாதம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.இந்த சமயத்தில் தர்பூசணி மற்றும் இதர நீர் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

தர்பூசணி வியாபாரிகள் பொதுவாக திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தர்பூசணி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிலோ 20 ரூபாய்க்கும், மொத்தமாக விற்கும்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறுகின்றனர். சில்லரை விற்பனையில் ஒரு பீஸ் தண்ணீர் பழம் பத்து ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும் கூறுகின்றனர்.

விற்பனை அமோகம் :-

தேனி மாவட்டத்தில் மிதுலா, விலாசா என்ற புதிய ரக தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த வகை தர்பூசணி இயல்பாக மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. அதிக நீர்ச் சத்து மற்றும் இனிப்பு சுவை கொண்டுள்ளதால் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதாக கூறுகின்றனர் தர்பூசணி கடை உரிமையாளர்கள்.

திண்டிவனம் தர்பூசணி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் மஞ்சள் நிறத்திலான புதிய ரக தர்ப்பூசணி கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோடை காலம் தொடங்கி விட்டதால் , புதிய ரக தர்பூசணி விற்பனை கம்பம், சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் தர்ப்பூசணி வியாபாரிகள்.

top videos

    செய்தியாளர் : சுதர்ஸன்

    First published:

    Tags: Summer, Summer Food, Theni, Watermelon