Home /local-news /

தேனி: விபத்தில் இறந்தவரின் உடலோடு சாலை மறியல்!

தேனி: விபத்தில் இறந்தவரின் உடலோடு சாலை மறியல்!

Road accident issue 

Road accident issue 

சின்னமனூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் எடுத்து வரப்பட்ட அமரர் ஊர்தியுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக சின்னமனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

    சின்னமனூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் எடுத்து வரப்பட்ட அமரர் ஊர்தியுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக சின்னமனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை விபத்து :-


    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கேயன் கோட்டைப் பகுதியை சேர்ந்தவர் 32 வயதாகும் ராதாகிருஷ்ணன். இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பரான 34 வயதாகும் ரஞ்சித்குமார் என்பவருடன் நேற்று மாலை மார்க்கேயன்கோட்டையில் இருந்து சின்னமனூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.‌

    அப்போது, சிவகாமியம்மன் கோயில் அருகே உள்ள நான்கு ரோடு சந்திப்பான திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.‌ ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்‌.
    இந்நிலையில், உயிரிழந்த ரஞ்சித்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று அவரது ஊரில் அடக்கம் செய்வதற்காக அமரர் ஊர்தியில் எடுத்து வரப்பட்டது.

    அப்போது அடிக்கடி விபத்து ஏற்படும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்த பிறகு, அந்த சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறி இறந்தவரின் உறவினர்கள் இன்று திடீரென சின்னமனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சின்னமனூர் ரவுண்டானா சந்திப்பில் ரஞ்சித்குமாரின் சடலம் எடுத்து வரப்பட்ட அமரர் ஊர்தியுடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    அங்கிருந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு அமரர் ஊர்தியை எடுத்துச் சென்றனர். இதனால், சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Road accident, Theni

    அடுத்த செய்தி