Home /local-news /

தேனி மக்களுக்கு குட்நியூஸ்... இனி மின்வெட்டு குறைய வாய்ப்பு

தேனி மக்களுக்கு குட்நியூஸ்... இனி மின்வெட்டு குறைய வாய்ப்பு

Theni Power Cut | தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    லோயர் கேம்பில் உள்ள பெரியார் மின் நிலையத்தில், ஒரு ஜெனரேட்டரில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக மின்சார உற்பத்தி தொடங்கியுள்ளது.

    பெரியார் மின் நிலையம் :-

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போது ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

    இந்த நிலையில், சமீப நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லை. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது . முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதன் காரணமாக லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 42 மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டது.

    தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் 2-ம் போக நெல் சாகுபடிக்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இவ்வாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 84 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136.50 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 324 கன அடியாகவும் உள்ளது.

    லோயர் கேம்பில் உள்ள பெரியார் மின் நிலையத்தில் கூடுதலாக ஒரு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி தொடங்கி உள்ளதால் மின் வெட்டு குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி