Home /local-news /

தேனி மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) எந்தெந்த பகுதிகள் மின்தடை தெரியுமா?

தேனி மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) எந்தெந்த பகுதிகள் மின்தடை தெரியுமா?

Power cut

Power cut

Theni District | தேனி மாவட்டம், கம்பம் 110/22 துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 05/04/22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மின்தடை :-

    தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம், கம்பம் 110/22 துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, கே.கே.பட்டி, ஆங்கூர்பாளையம் , சாமாண்டிபுரம், கேஜி பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (ஏப்ரல் 5) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் தேனி மாவட்டத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுமாயின் அதனை பற்றிய புகார் கொடுக்கவும் மற்றும் மின் இணைப்பு தொடர்பான அனைத்து புகார்களும் 1912 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Gudalur, News18, Power cut, Shutdown, Theni, TNEB

    அடுத்த செய்தி