Home /local-news /

Theni Power Cut | தேனியில் நாளை (ஜனவரி 25) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

Theni Power Cut | தேனியில் நாளை (ஜனவரி 25) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தேனியில் நாளை (ஜனவரி 25) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தேனியில் நாளை (ஜனவரி 25) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 25/01/22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பண?

    தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 25/01/22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடைபடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மின்தடை :-

    தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆத்தங்கரை பட்டி, துரைசாமிபுரம், நரியூத்து, ராஜேந்திரா நகர், வருஷநாடு, மயிலாடும்பாறை, குமணன்தொழு, கடமலைக்குண்டு, பாலுத்து, குமணன் தொழு,அருள்வெளி வாலி பாறை, சிறை பாறை தங்கம்மாள்புரம், மந்திசுனை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால், கடமலைக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி