Home /local-news /

கோடை வெயிலை சமாளிக்க காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தேனி எஸ்.பி

கோடை வெயிலை சமாளிக்க காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தேனி எஸ்.பி

காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தேனி எஸ்.பி

காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தேனி எஸ்.பி

Theni | தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கோடை காலத்தில் தேனி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், கோடை வெப்பத்திலும் பணியாற்றும் காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் காவலர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் போக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

    பழச்சாறு வழங்கும் திட்டம் :-

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களை போலவே தேனி மாவட்டத்திலும் கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வருகிறது.

    கோடைகாலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு, வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடவும், உடல் சோர்வை போக்கும் விதமாகவும் கோடை காலம் முடியும் வரை, தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பழச்சாறு வழங்கும் பணி தேனி நகரத்தில் உள்ள நேரு சிலை சிக்னலில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார்.

    வெயிலில் பணியாற்றிய போலீசாருக்கு பழச்சாறை வழங்கியதுடன் அவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

    மன அழுத்தத்தைப் போக்கும் :-

    ஜூன் மாதம் வரை தினமும் பகல் நேரத்தில் பழச்சாறு வழங்க வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் தற்போது பகல் நேரங்களில் 95 டிகிரி வெயில் பதிவாவது குறிப்பிடத்தக்கது.

    காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், \" காவலர்கள் நாள் முழுவதும் மழை வெயில் என பாராமல் அனைத்துக் காலநிலைகளிலும் தொடர்ந்து மக்களுக்காக வேலை பார்த்து வருகின்றனர். கடும் கோடை வெப்பத்தால் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையிலும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அவர்களுக்கு உடல் சோர்வு மனச்சோர்வு மன அழுத்தமும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. கடும் கோடைக் காலத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்க சிறிது நேர ஓய்வும் இந்த பழச்சாறு வழங்கும் திட்டம் போன்ற செயலும் உதவும்\" என்றனர்

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Summer, Theni, Traffic Police

    அடுத்த செய்தி