Home /local-news /

தேனி மாவட்டத்தில் நீண்ட நாள் துறை சார்ந்த பிரச்னையா? தீர்வு காணுவது சுலபம்...

தேனி மாவட்டத்தில் நீண்ட நாள் துறை சார்ந்த பிரச்னையா? தீர்வு காணுவது சுலபம்...

District collector 

District collector 

Theni | தேனி மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பொது பிரச்சினைகள் இருந்தால் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு மனு அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் நீண்டநாட்களாக பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால் உடனே மனு அளியுங்கள் - மனுக்கள் குழு தேனி மாவட்டத்திற்கு வருகை! பயன் என்ன தெரியுமா?

    தேனி மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பொது பிரச்னைகள் இருந்தால் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு மனு அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுக்கள் குழு :-

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-2022 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழுவானது தேனி மாவட்டத்திற்கு விரைவில் வரவுள்ளது.
    இதனையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ அவர்களுக்கு தீர்க்கப்பட வேண்டி பொது பிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு அனுப்பி பயன்பெறலாம். இந்த மனுவானது 5 நகல்கள் கொண்ட கொண்ட தமிழ் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.

    மனுதாரர் மனு எழுதப்பட்ட தேதியுடன் கையொப்பமிட்டு, மனுக்கள் குழுவின் தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விதிமுறைகள் :-

    மேலும் பொதுமக்கள் அனுப்பும் மனுக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் அனுப்பும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சனைகளை குறித்ததாக மனுக்களாக இருக்காலாம்.

    மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும் ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாகவும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனுப்பும் மனுவானது சில குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து இருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, தனிநபர் குறை, நீதி மன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசு பணியின் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலகங்களில் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற தேவைகளுக்காக மனுக்கள் அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    கடைசி நாள் :-

    சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்விற்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் குழு முக்கியத்தும் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கேட்டறியப்படும். இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 20.04.2022க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார் .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி