கும்பக்கரை அருவி திறப்பு - உள்ளூர்வாசிகள் உற்சாக குளியல்
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கும்பக்கரை அருவி :-
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடைவிதித்திருந்தனர்.
தற்போது, நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சுருளி, மேகமலை அருவி போன்ற அருவிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டபோது கும்பக்கரை அருவி திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பக்கரை அருவியில், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு, கும்பக்கரை அருவி திறக்கப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி, அருவியில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.