Home /local-news /

கொட்டிய மழையால் குளிர்ந்த தேனி-மக்கள் மகிழ்ச்சி.!

கொட்டிய மழையால் குளிர்ந்த தேனி-மக்கள் மகிழ்ச்சி.!

Rainfall 

Rainfall 

Theni |தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்றும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்றும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோடை மழை :-
    தமிழகத்தில் முன்னதாகவே கோடை காலம் துவங்கி உள்ளதால், கடும் வெப்பநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் வெப்பநிலை 100° க்கும் மேல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில், இன்றும் தேனி மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

    போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம், கூடலூர் என அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் ஒரு மணிக்கு மேல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கோடை மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    கோடை மழை காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி, போடி நாயக்கனூர் பகுதியில் 39.6 மில்லிமீட்டர் மழை அளவும், பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் 43.6 மில்லிமீட்டர் மழை அளவும், தேக்கடியில் 30.0 மில்லிமீட்டர் மழை அளவும், உத்தமபாளையம் பகுதியில் 12.0 மில்லிமீட்டர் மழை அளவும், கூடலூரில் 3.8 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேற்றைவிட இன்று மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Rain Update, Rainfall, Theni

    அடுத்த செய்தி