Home /local-news /

ஆசிரியரையே மிரட்டும் மாணவர்கள்.. "மாணவிகளை எந்த தைரியத்தில் பள்ளிக்கு அனுப்புவது" - பெற்றோர்கள் அச்சம் 

ஆசிரியரையே மிரட்டும் மாணவர்கள்.. "மாணவிகளை எந்த தைரியத்தில் பள்ளிக்கு அனுப்புவது" - பெற்றோர்கள் அச்சம் 

School students 

School students 

Theni : மாணவிகள் தினசரி பள்ளிக்கு செல்வதில் இடையூறை சந்திப்பதாகவும் , இதனால் சில பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் சூழல் உள்ளது என தெரிவித்தனர்.

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு சில மாணவர்கள் ஆசிரியரையே மிரட்டுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் பெண் பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என பெற்றோர்கள் மேலாண்மை குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலாண்மை குழு கூட்டம்:-

    தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பது மற்றும் மேலாண்மை குழுவின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைப்பது பற்றிய கூட்டம் நடைபெற்றது.

    அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழுவின் நடவடிக்கைகள் என்ன? அது எவ்வாறு மாணவர்களை வழி நடத்தும்? என்பது பற்றியும் பெற்றோர்களின் பங்களிப்பு என்ன? என்பது பற்றியும் விளக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    மாணவிகள் அச்சம் :-

    தேனி மாவட்டத்தில் ஆசிரியரை மாணவன் மிரட்டும் காணொளி வெளிவந்தது இப்பள்ளியில் தான். இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஒன்றுகூடி புகார் அளித்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் பெரும்பாலோனோர் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களால் ஆசிரியர்களுக்கே அச்சுறுத்தல் இருக்கும் சமயத்தில் எந்த தைரியத்தில் மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது என்று கேள்வி எழுப்பினர்.

    மாணவிகள் தினசரி பள்ளிக்கு செல்வதில் இடையூறை சந்திப்பதாகவும் , இதனால் சில பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் சூழல் உள்ளது என தெரிவித்தனர்.

    மேலும் சில பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பதால் இடைநிற்றல் ஏற்படும் எனவும், பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்ததோடு தேவதானப்பட்டியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியை பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றி அமைத்தும், ஆண்களுக்கு என்று தனியான பள்ளியை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

    பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்ற கோரிக்கை :-

    பெண் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் அப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதால், பெண் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தினால் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டும் நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், பள்ளியை மாணவிகளுக்கான பள்ளியாக மாற்ற வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவதானப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்பள்ளியில் ஒருசில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டியதும், அதனால் ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக் கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் மாணவிகளின் நலன் கருதி மாணவிகளுக்கும் பாதுகாப்பு கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி