Home /local-news /

தேவாரம் : நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி - முடிவுக்கு வந்தது ஆறு மாத சிக்கல்

தேவாரம் : நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி - முடிவுக்கு வந்தது ஆறு மாத சிக்கல்

சாக்கடை

சாக்கடை பிரச்சனை தொடர்பாக, நியூஸ் 18 உள்ளூர் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மக்களிடையே சாக்கடை திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

சாக்கடை பிரச்சனை தொடர்பாக, நியூஸ் 18 உள்ளூர் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மக்களிடையே சாக்கடை திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

    தேவாரம் : நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி - முடிவுக்கு வந்தது ஆறு மாத சிக்கல்

    தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் சாக்கடை அமைக்கும் பணி தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சனை நிலவி வந்தது. இதனால் சாக்கடை கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டதையடுத்து நியூஸ் 18 உள்ளூர் செய்தியில் செய்தி ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி சாக்கடை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    சாக்கடை கட்டும் பணி :-

    தேவாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெரு பகுதியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பேரூராட்சி பகுதியில் சாக்கடை கழிவு நீரை முறையாக வெளியேற்றுவது, தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தேவாரம் வடக்கு தெரு பகுதியில் இருக்கும் 3000 வீட்டு சாக்கடை கழிவுநீர்களையும் கடத்துவதற்காக பேரூராட்சி சார்பில் பெருமாள்பட்டி வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனால் தேவாரம் பெருமாள்பட்டி பகுதியில் சுமார் 150 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். தேவாரம் வடக்கு தெரு பகுதியில் உள்ள கழிவுநீரை பெருமாள்பட்டி பகுதியில் கொண்டு செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியானது சுமார் 6 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    சாக்கடை கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சாக்கடை நீரானது சாலைகளில் ஓடி, துர்நாற்றம் வீசத் தொடங்கி, தேவாரம் பகுதி மக்களுக்கு பல்வேறு சிக்கல்களை கொடுத்தது.

    இந்த நிலையில், சாக்கடை பிரச்சனை தொடர்பாக, நியூஸ் 18 உள்ளூர் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மக்களிடையே சாக்கடை திட்டம் குறித்து எடுத்துரைத்தனர். மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடனடியாக சரி செய்து, பின்னர் இருதரப்பினர் இடையே சாக்கடை கட்ட ஒப்புதல் வாங்கி உடனடியாக சாக்கடை கட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.

    நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டு, முறையாக சாக்கடை கட்டுவதற்கான திட்டமிட்டு, சாக்கடை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: News18 Impact, Theni

    அடுத்த செய்தி