Home /local-news /

‘அம்பரப்பர் மலை எங்க குலதெய்வம்..’ நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக தேனி பொட்டிபுரம் மக்கள்..!!

‘அம்பரப்பர் மலை எங்க குலதெய்வம்..’ நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக தேனி பொட்டிபுரம் மக்கள்..!!

Theni

Theni Pottipuram

Theni | இந்து மக்களுக்கு பாதுகாப்பாக விளங்கும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் , இந்து மக்கள் கடவுளாக வழிபடும் அம்பரப்பர் மலையை நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

    தேனி : நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள மலையை கடவுளாக வழிபடும் கிராம மக்கள் - கடவுளை துளையிட அனுமதிக்கலாமா என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் கிராம மக்கள் கேள்வி..

    தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து எடுக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த நிலையில், இச்சம்பவத்திற்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் விவசாயிகள்

    கோரிக்கை மனு :-

    இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மாவட்டத்தில் உள்ள சில முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பது குறித்த கோரிக்கை மனு வழங்கினார்.

    தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அறிவியல் உலகில் தமிழகத்திற்கும் பாரத நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.

    கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், புவியியல் ஆராய்ச்சி மூலம் விவசாய மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

    மேதகு அப்துல் கலாம் ஆதரித்த இத்திட்டம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சூழலியல் போராளிகள் எனும் பெயரில் அறிவியல் வளர்ச்சியை தடுப்பு மீது நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    Arjun sambath 
    அர்ஜுன் சம்பத்


    முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

    நியூட்ரினோ ஆய்வகம்:-

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் , \" நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தகவல் தொழில்நுட்பம், புவியியல் ஆராய்ச்சி, மருத்துவம், கல்வி போன்றவற்றை அடுத்தக்கட்டத்தில் அழைத்துச் செல்லக்கூடியது எனவும், தமிழகம் அறிவியலில் முன்னேறிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில சக்திகள் பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி வருகிறார்கள். இந்தியா மற்றும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல இந்த நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என கூறினார்.

    Theni Pottipuram


    தேனி மாவட்ட விவசாயிகள் நிலைப்பாடு:

    நியூட்ரினோ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தேனி மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, தமிழக முதல்வர் சமீபத்தில் நியூட்ரினோ திட்டம் தமிழகத்தில் குறிப்பாக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று மனு அளித்தது தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து நியூட்ரினோ திட்டத்திற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் தேனி மாவட்ட விவசாயிகள் கூறுகையில் , நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ள அம்பரப்பர் மலையை இப்பகுதியைச் சேர்ந்த 5 கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அம்பரப்பர் சிவபெருமான் கோவில் இந்த மலை மேல் உள்ளதால் இந்த மலையே அம்பரப்பர் மலையாக வழிபட்டு வருகிறோம். ஆண்டு தோறும் இக்கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    அம்பரப்பர் மலை :-

    பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலை என்று அடையாளப்படுத்தப்பட்ட நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ள மலை , சுருளி ஆண்டவர் மலை,வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை போல ஆன்மீக ரீதியாக அம்பரப்பர் சிவபெருமானை வணங்கி அம்பரப்பர் மலையாக வணங்கி வருகிறோம்.

    நியூட்ரினோ திட்டத்தால், இந்தியா, தமிழ் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்தாலும், யூட்யூப் ஆய்வகம் இப்பகுதியில் அமைக்கப்பட்டால் அதன் விளைவுகள் குறித்தும் நாங்கள் பெரிதும் யோசிக்கவில்லை. இந்து மக்களுக்கு பாதுகாப்பாக விளங்கும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் , இந்து மக்கள் கடவுளாக வழிபடும் அம்பரப்பர் மலையை நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

    நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள அம்பரப்பர் மலையை துளையிடுவதும் ஒன்றுதான் நாங்கள் கடவுளாக வழிபடும் குலதெய்வத்தை துளையிடுவதும் ஒன்றுதான்\" என்றனர்

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Neutrino Project, Theni

    அடுத்த செய்தி