Home /local-news /

தேனி: தாய், தந்தை, மகன் மூவருக்கு ஆயுள் தண்டனை - காரணம் என்ன?

தேனி: தாய், தந்தை, மகன் மூவருக்கு ஆயுள் தண்டனை - காரணம் என்ன?

Crime

Crime

Theni | தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை சம்பவத்தில் தொடர்பு கொண்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு ஆயுள் தண்டனை :-

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது கருநாக்கமுத்தன்பட்டி என்ற கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த இருபத்தி ஏழு வயதாகும் அஜீத் குமார் மற்றும் 20 வயதாகும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் நண்பர்கள். 2016ஆம் ஆண்டு இவர்களுக்குள் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தில் அஜித்குமார் செல்லப்பாண்டியை தாக்கியதால் கூடலூர் காவல் நிலையத்தில் செல்லப்பாண்டி அஜீத்குமார் மீது புகார் அளித்தார்.

    இச்சம்பவத்தால் அஜித் குமாருக்கு செல்லப்பாண்டி மீது கடும் கோபம் ஏற்பட்டு முன்விரோதம் ஆக மாறியது. 2016ஆம் ஆண்டு செல்லப்பாண்டி அஜித்குமார் வீட்டின் வழியாக சென்று கொண்டிருந்தபோது அஜித்குமார் செல்லப்பாண்டியை வழிமறித்து தகராறு செய்து உள்ளார். இதனால் அஜித் குமார் மற்றும் செல்லப்பாண்டிக்கு இடையே தகராறு முற்றியது. இந்த தகராறில் அஜித்குமாரின் தாய், தந்தை, தம்பி ஆகியோரும் சேர்ந்து செல்லப்பாண்டியை தாக்கினர். பிரச்சினை முற்றிய பிறகு அஜித்குமார் செல்லபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் செல்லபாண்டி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக அஜித் குமார் மற்றும் அவரது தந்தை கண்ணன், தாய் ராம தாய் தம்பி வினோத் குமார் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி சாந்திசெழியன் தீர்ப்பு அளித்துள்ளார்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அஜித்குமார், கண்ணன், தாய் ராமுத்தாய் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த மூவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அஜித்குமாரின் தம்பியான வினித் குமாருக்கு சம்பவத்தின்போது 17 வயதை ஆனதால் அது தொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாகம் முத்தம்பட்டி கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி