உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள நல்லுணர்வை வலுப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
மாரத்தான் போட்டி :-
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் தேனி மாவட்ட காவல்துறை மற்றும் சின்னமனூர் பிரிக்ஸ் விளையாட்டுக் குழுவினரின் சார்பில் உடற்பயிற்சி விழிப்புணர்வு, தலைக்கவசத்தின் அத்தியாவசியம் மற்றும் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள நல்லுணர்வை வலுப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது
இப்போட்டியில் தொடக்கப் பள்ளி சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர் வரை இப்போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் கம்பம், சின்னமனூர், தேனி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
கோம்பை முதல் தேவாரம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டியில் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த வேல்முருகன் முதல் பரிசை வென்றார் மேலும் இப்போட்டில் இரண்டாம் வகுப்பு படிக்கும் கோம்பையை சேர்ந்த மாணவன் சச்சின் சிறுவர் பிரிவில் முதல் பரிசு பெற்றார்.
மேலும் இப்போட்டியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசும் பதக்கமும் சான்றிதழ்களை போடி கோட்ட துணை கண்கானிபாளர் சுரேஷ் வழங்கினார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.